பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 170 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் வணிகத் தொடர்பு மற்றும் தொழில்முறைத் தொடர்பு ஆகிய இரண்டு முக்கியத் தலைப்புகள் பேசப்பட்டது. முன்னாள் மாணவர்கள் கல்லூரிப் படிப்புக்குப் பின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமி, துணை முதல்வர் செந்தில்குமார், பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
