கோவில்பாளையம் ரத்தினம் பன்முக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஜி18 அறக்கட்டளை இணைந்து “காற்றின் மடி’ நிகழ்ச்சியை நடத்தினர். கல்லூரியின் முதல்வர் ஹேமாநளினி வரவேற்புரை ஆற்றினார், பாரம்பரியம், கல்வி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
துவராகமாயி சேவா சங்கம் நடத்திய “தெய்வீக ராகங்கள்” பக்தி பஜனைகளை நிகழ்த்தியதால் ஆன்மீக நல்லிணக்கம் காற்றில் நிறைந்தது.
சி ஐ டி கல்லூரி மாணவர்கள் “நினைவூடும் கானங்கள்” என்ற தலைப்பில் பாடல்களின் தொகுப்பை வழங்கினர். மேலும் சங்கராபரணம் மியூசிக் அகாடமியின் வீணைகளில் விரல்கள்” மற்றும் “இசைப்பலகை” ஆகிய நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது .
நிகழ்வில் G18 அறக்கட்டளையின் நிகழ்ச்சிகளான கிராமிய வாழ்க்கையை கவிதையாக சித்தரிக்கும் “கிராம வாசம்” மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக “இதுவும் கடந்து போகும்” நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
வாகராயம்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, கோவை ஆட்சியர் அலுவலகத்தின் மதிப்புமிக்க “மிளிரும் பள்ளி விருது” பெற்றதற்காக அங்கீகாரம் பெற்றது சிறப்பு. பள்ளியின் சிறப்பான சாதனைக்கு நிகழ்ச்சியில் பாராட்டும், அப்பள்ளியை வாழ்த்தி கல்லூரி சார்பாக விருதும் கல்லூரி முதல்வர் வழங்கினார். மேலும், பொன்னே கவுண்டன் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி, இந்த நிகழ்வின் போது பந்துகள் மற்றும் மட்டைகள் போன்ற உடற்கல்வி உபகரணங்களை பள்ளிக்காக கோரி ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர். சமூக வளர்ச்சிக்கான திட்டத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தியது.