தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ‘உயிர் பாதுகாப்பு குழு’ அமைப்பதற்கான வழிநடத்தல் குழு உறுப்பினர்களின் முதல் முன்னோட்டக் கூட்டம் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன் தலைமை தாங்கினார். தொழிற்சாலைகளில் “உயிர் பாதுகாப்பு குழு” அமைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், பணியிடங்கள், வீடுகள், சாலைகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய இக்குழு முக்கிய பங்கு வகிக்கும் என வலியுறுத்தினார். கூட்டத்தில் பல நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள் தங்களது ஆலோசனைகளை பகிர்ந்தனர்.

