தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே மீதம் உள்ள நிலையில், கோவை செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதில் 100 % வாக்களிப்பதன் அவசியம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இதை கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் பொதுமக்களுடன் இனைந்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமையினையாற்ற வேண்டுமென கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டார்.


