கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்படும் என தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, பெரிய கடைவீதிப் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள், அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கி வாக்குகளை சேகரித்தார்.

2 7 scaled

பின்னர் மக்கள் மத்தியில் பேசிய செந்தில் பாலாஜி, வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும், தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றி, பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்துவோம். கோவை மாநகர வளர்ச்சிக்காக 8600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார் என தெரிவித்தார்.

5 2 scaled