கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன்லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு அருகே தொடங்கிய பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக் கழகப் பகுதியைத் தாண்டி மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பின்னர் தடாகம் சாலையில் அமைந்து உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம், தனது வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.
நிகழ்வில் அதிமுக சார்பில் வடவள்ளி சந்திரசேகர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
