சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், மாணவ சமுதாயத்தினரிடம் சுற்றுச்சூழல் மாசுபாடு, மரம் வளர்ப்பு ஆகியனவற்றைப் பற்றிய விழிப்புணர்வினை உண்டாக்கும் வகையில், ‘ஏப்ரல் கூல் டே – பசுமை தினம்’ அனுசரிக்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளிச் செயலர் கவிதாசன் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஒன்றாம் தேதியை ‘கூல் டே’ எனப்படும் பசுமை தினமாகக் கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் கொண்டாடி வருகிறோம்.

மரம் வைத்தால் மழை பொழிகிறது. மண் குளிர்ச்சியடைகிறது. வெப்பம் தணிகிறது. தூய்மையான காற்று ஆகாயம் முழுவதும் நிறைந்து ஓசோன் படலத்தைப் அடைக்கிறது. ஆண்டுதோறும் வெப்பம் அதிகரித்து வருவதாக நாம் அறிகிறோம். வெப்பம் அதிகரிப்பதைக் குறைக்கும் விதமாக மரம் நடுவதை நாங்கள் பழக்கமாக மாற்றி வருகிறோம். பள்ளி வளாகத்தில் மட்டுமே 1800க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. அவற்றில் மருத்துவ குணம் மிக்க மரங்கள் மற்றும் தாவரங்கள் பல உள்ளன. என்று பேசினார்.
பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

