ரோட்டரி கிளப் ஆஃப் சாய்சிட்டி மற்றும் ரோட்டரி மாவட்டம் 3206 ஆகியவற்றின் சார்பில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு, ‘மானுட ஐகான்’ விருது வழங்கப்பட்டது.
மாவட்ட கவர்னர் ரோட்டேரியன் செல்லா ராகவேந்தர் விருதினை வழங்கினார். விழாவில் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் குழு கலந்துகொண்டனர்.
சி.வி. ராம்குமார், ‘கிபிட் ஆஃப் லைஃப்’ திட்டத்திற்கு ஆற்றிய தொடர்ச்சியான, பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டது. இந்த திட்டம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சாய்சிட்டி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக செயல்படுகிறது.
பிறவியிலேயே இருக்கும் இதயக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சரியான மருத்துவ தலையீடு இல்லாமல் உயிருக்கு ஆபத்தான இந்த நிலையில் உள்ள எண்ணற்ற குழந்தைகளுக்கு இந்த திட்டம் புதிய வாழ்வை அளித்துள்ளது.

