தொண்டாமுத்தூர் ரோடு உலியம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மகா சரஸ்வதி பயிற்சி நிறுவனத்தின் 3ம் ஆண்டு ‘மகாசரா உத்சவ்’26’ விழா நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கலந்து கொண்டார்.

2 17 scaled

நிகழ்வில் தையல் மற்றும் ஆரி பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் வெஸ்டர் நடனம் அரங்கேறியது. இலவச தையல் இயந்திரம் வழங்குதல், பேஷன் டிசைனிங்கில் வடிவமைத்த ஆடை, லுங்கியில் பெண்களுக்கான ஆடை, ஆரி எம்பிராய்டரியில் கிருஷ்ணர், மீனாட்சி அம்மன் உருவங்கள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

3 18

விழாவில் மகா சரஸ்வதி நிறுவன இயக்குனர் ராஜலெஷ்மி, ஸ்பையர் சென் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர்கள் லெஷ்மி நாதன், நிதின்திலக் லெஷ்மி நாதன் கலந்துகொண்டனர்.  400க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

4 16 scaled