ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, குஜராத்தின் சூரத்திலுள்ள ஆரோ பல்கலைக்கழகம் “இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருதை 24.03.2026 (இன்று) நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில் வழங்கியது.
இக்கல்லூரி மாணவர்கள் இன்டர்நேஷனல் மற்றும் தேசிய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஹேக்கத்தான் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று வருகின்றனர். அண்மையில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ஸ்மாா்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் பொறியியல் கல்லூரிகளுடன் போட்டியிட்டு, முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுள் கலை அறிவியல் கல்லூரி அணி இது ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, பன்னாட்டு அளவில் இஸ்ரேல் ஏரியல் பல்கலைக்கழகம் நடத்திய இஸ்ரேல் ஹேக்கத்தான் போட்டியில் இந்தியா சார்பில் இந்தக் கல்லூரி பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, புதுமைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎம் நிறுவன தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகம், நாட்டின் மேலாளர் ஜெகதிஷா பட் “இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருதினை வழங்க, கல்லூரியின் சார்பில் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.
“இன்ஸ்டிடியூசனல் எக்ஸ்சலன்ஸ்” விருதினைப் பெற்று தந்த கல்லூரியின் மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
