கோடை காலம் துவங்கி நடந்துவரும் நிலையில் சென்ற வாரம் கோவை மாநகரின் சில பகுதிகளில் வெப்பசலன மழை பெய்தது.
இதே நிலைமை இந்த வாரம் (23.3.26 – 29.3.26) இருக்குமா அல்லது வறட்சியான வானிலை சூழல் நிலவுமா என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது :-
இந்த வாரம் கோவை மாநகரில் வறண்ட வானிலை சூழலே பெரும்பான்மையாக நிலவும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு அருகே இருக்கும் இடங்களில் 1 அல்லது 2 நாட்கள் லேசான மழை பெய்யலாம். வார நாட்களில் 35° செல்ஸியஸ் முதல் 36 ° செல்ஸியஸ் வரை செல்ல வாய்ப்புள்ளது. அதுவே வார இறுதி நாட்களில் 37° செல்ஸியஸ் வரை கூட செல்ல சாத்தியமுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
