இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை லாரன்ஸ் & மாயோ கண் பரிசோதனை நிலையம் நடத்தினர். முகாமை கல்லூரி முதல்வர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார். முகாமில் ஏராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனைகளை செய்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

