இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், அசாம் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படும்.

தேர்தலில் நாமினேஷன் செய்வதற்கு ஏப்ரல் 6ம் தேதி இறுதி நாளாகவும்,  தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த விருப்ப மனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் 824 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்தாண்டு தேர்தலில் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் இடம் பெறும்.

தமிழகத்தில் மட்டும் 75,032 வாக்குச்சாவடிகள் இடம் பெறும். நகரப் பகுதிகளில் 30,967 கிராமப் பகுதிகளில் 44,605 வாக்கு சாவடிகளும் இடம் பெறுகிறது.

15 லட்சம் பேர் தேர்தல் அதிகாரிகளாக இருப்பார்கள். 8.5 லட்சம் பேர் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட பிற அலுவலர்களாக இருப்பார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.