ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, “ராமன் – ராமானுஜன் விருதுகள் 2026” வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் சாதனைகளுக்காக விருதுகளைப் பெற்றனர்.

rcas 2 scaled

விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் பாலசுப்ரமணியன், தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். அறிவியல் புலன் முதன்மையர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். பல்வேறு பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நுட்பக்கலைகள் புலன் முதன்மையர் சதீஷ் ஆனந்தன், வணிகவியல் புலன் முதன்மையர் ஹேமலதா மற்றும் கணினி அறிவியல் புலன் முதன்மையர் அருண் குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவியல் ஆராய்ச்சி மற்றும் புதுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினர்.

rcas 3