கோவை மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்புகள் ஜெம் மருத்துவமனை உடன் இணைந்து எளிமை நிலையில் உள்ள 30 குழந்தைகளை, சென்னையிலிருந்து கோவைக்கு விமானத்தில் அழைத்து சென்று மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பிளைட் ஆப் பேண்டஸி எனும் திட்டத்தின் மூலம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ஏழை குழந்தைகளை விமானப் பயணத்திற்கு அழைத்து சென்று, அவர்களும் வாழ்க்கையில் உயரப் பறக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கி வருகிறது.

FLight of fantasy 2

இம்முறை கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 மற்றும் ஜெம் மருத்துவமனையுடன் இணைந்து 30 குழந்தைகளுக்கு இந்த விமானப் பயண அனுபவத்தை வழங்கின.

இந்த சுற்றுப்பயணத்தின் போது, குழந்தைகள் பராமரிப்பாளர்கள், ரவுண்ட் டேபிள் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் கோவைக்கு வந்து, ஜீடி கார் அருங்காட்சியகம், வனக் கல்லூரி அருங்காட்சியகம் மற்றும் மண்டல அறிவியல் மையம் ஆகிய இடங்களை பார்வையிட்டனர்.

இந்த திட்டத்தை, கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133-இன் தலைவர் ஸ்ரீராம், துணைத் தலைவர்  வெங்கட் விஸ்வாஸ், செயலாளர் அக்‌ஷய் மற்றும் பொருளாளர் வருண் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மேலும், கோவை பெண்ட்டா ரவுண்ட் டேபிள் 101-இலிருந்து தலைவர் ஹர்ஷவர்தன், துணைத் தலைவர் பிரணவ் செந்தூர், செயலாளர் கரண் ரஹேஜா மற்றும் பொருளாளர் தருண் குப்தா ஆகியோரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தினர்.