டவுன் ஹால் பகுதியில் அமைந்துள்ள கோவை மாநகராட்சியின் பிரதான
அலுவலகத்தில் ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும்.

இந்த கூட்டம் மூலம் கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பொது குறைகளை மனுவாக மாநகராட்சி நிர்வாகத்திடம் கொடுக்கமுடியும்.

அந்த வகையில் நாளை (10.03.2026) மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், காலை 11.00 மணி அளவில் நடைபெறும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.