மருதமலை கோவில் வளாகத்திற்குள் நாளை முதல் (மார்ச் 10) செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் நாளை முதல் ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் கோவில் வளாகத்திற்குள் செல்போன் பேசவும், புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் கைபேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய ஒத்துழைப்பு நல்குமாறு கோவில் நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
