கே.ஜி.ஐ.எஸ்.எல் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திவ்யலக்ஷ்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 7வது ஆண்டாக இந்த ஆண்டும் விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சாதனை பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்விற்கு கே.ஜி.மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

