உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோவை அஸ்வின் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான உடல் பருமன், எடை குறைப்பு ஆலோசனை, பொது மருத்துவ ஆலோசனை, டயட் ஆலோசனை, பிஸியோதேராபி பயிற்சி, நுரையீரல் மூச்சு பரிசோதனை ஆகியவற்றை ரேஸ் கோர்ஸ் சோன் 2ல் மார்ச் 7ம் தேதி வரை வழங்க உள்ளது.

பெண்களுக்கான சிறப்பு வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். இதனை பி.பி.ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சாந்தி தங்கவேலு முன்னிலையில், அஸ்வின் மருத்துமனையின் இயக்குனர் டாக்டர் அஸ்வின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பி.பி.ஜி கல்வி நிறுவனங்கள் தலைவர் மற்றும் அஸ்வின் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் தங்கவேலு, மருத்துவர்கள் பூபாலா, ஸ்வேதா, பி.பி.ஜி நிறுவனங்கள் அசோக் குமார், அக்ஷய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அஸ்வின் மருத்துமனை சார்பாக பொது மேலாளர் இளங்கோ, மார்க்கெட்டிங் மேலாளர் சுரேஷ், பர்ச்சேஸ் மேலாளர் வடிவேலு, மக்கள் தொடர்பு அதிகாரி ஜீவகன் மற்றும் அஸ்வின் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
