ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி சாரு பாலா, அகில இந்திய பல்கலைக்கழக சதுரங்க போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற சதுரங்க போட்டியானது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கீதம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பங்கு பெற்ற மகளிர் சதுரங்க அணியானது மூன்றாம் இடத்தை பெற்று அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளது. அடுத்த மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஐ.ஐ.எம்.டி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கிறது.
வெற்றி பெற்ற மாணவி சாரு பாலாவை, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

