அதிமுக நிறுவனர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்., அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை அதிமுக தலைவர்கள், தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடிவருகின்றனர்.

URF 4 scaled

இதன் ஒரு பகுதியாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

URF 3 scaled

சமீபத்தில் வெள்ளாணபட்டி  பகுதி, நரசிம்மநாயக்கன்பாளையம் , சரவணம்பட்டி, குருடம்பாளையம், சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அவர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நேற்று நரசிம்மநாயக்கன்பாளையம்பாளையத்தில் உள்ள மங்கள் அக்ஷதா திருமண மண்டபத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

URF 2