பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லூரியில் ஸ்டார்டப் மாநாடு மற்றும் இயற்கை வேளாண் கண்காட்சி நடந்தது,

இதில் இயற்கை விவசாய உணவுகள், விவசாய கருவிகள், சிறுதானிய உணவுகள், இயற்கை இடுபொருட்கள் மூலிகை பண்ணை, உரங்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த அரங்கை கல்லூரி தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், சக்தி பினான்சியல் சர்விஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ருதி பாலசுப்பிரமணியம் திறந்து வைத்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட வளர்ச்சி மேலாளர் நபார்டு, திருமலா ராவ், கௌரவ விருந்தினராக இயற்கை விவசாயி மது ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாய பல்கலைகழகம் எம்.டி & சிஇஓ ஞானசம்பந்தம், ஸ்டார்டப் தமிழ்நாடு துணைதலைவர் சிவகுமார் பழனிசாமி கலந்து கொண்டு விவசாய வணிகம் குறித்து பேசினர்.

SIIMA 2

மாணவர்களுக்கு விவசாய ஸ்டார்டப் குறித்த பிரசண்டேசன் போட்டி நடந்தது. இதில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்று தங்களை படைப்புகளை விவரித்தனர். முதல் பரிசாக 10,000 ரூபாய் வானவராயர் வேளாண் கல்வி மாணவர்கள் பெற்றனர்.

நிகழ்வில் கல்லூரி இயக்குனர் (பொ) சர்மிளா, வாணவராயர் வேளாண் கல்லூரி முதல்வர் பிரபாகர், குமரகுரு வேளாண் கல்லூரி முதல்வர் ரவிகுமார்தியோடர், சக்தி முதல்வர் மாணிக்கசெழியன், இயக்குனர் சரவணபாபு, டீன் உமாபதி, என்.ஜி.எம் கல்லூரி மேலாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பொள்ளாச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண் விவாசய முனைவோர்கள், பல விவாசய வணிகர்கள் கலந்து கொண்டனர்.