நிர்மலா மகளிர் கல்லூரியில் 74வது விளையாட்டு விழா நடைபெற்றது. தலைமை விருந்தினராக இந்திய ராணுவத்தின் மருத்துவப் படையின் நர்சிங் நிர்வாகியான லெப் கர்னல் சுமதி, சிறப்பு விருந்தினராக வி.ஜி.எம். மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் சுமதி பேசுகையில், கல்லூரியில் பெற்ற ஒழுக்கம், மதிப்புகள் மற்றும் முழுமையான கல்வி ராணுவத் தொழில் வாழ்க்கைக்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. கல்லூரிக் காலமே ஒருவரின் பண்பையும், வாழ்க்கைப் பாதையையும் வடிவமைக்கும் முக்கியமான காலம் என்றார்.
சிறப்பு விருந்தினர் டாக்டர் சுமன், உடல் தகுதி, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவை விளையாட்டில் மட்டுமல்லாது வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றிக்கான அடிப்படைகள் எனப் பேசினார்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் சர்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான எடை தூக்குதல், கால்பந்து, தடகளம், கோ-கோ, மற்றூம் வலைப்பந்து போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகள் பாராட்டப்பட்டனர். நிகழ்வில் கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், முதல்வர் மேரி ஃபபியோலா, பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
