புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு முழுவதும் பல்வேறு தொழில்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இதில் நாடுமுழுவதும் உள்ள போக்குவரத்து, சுகாதாரம், மின் விநியோகம், காப்பீடு, கல்வி, எரிவாயு போன்ற துறைகளில் பணிபுரிவோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் இந்த வேலைநிறுத்தத்திற்கு கேரள அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். இதை அடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு – கேரளா எல்லையிலுள்ள பகுதியில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து தமிழ்நாடு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க வேண்டிய அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை, கேரளா எல்லை வரையே தமிழக பேருந்துகள் இயக்கம் என தெரியவருகிறது.
