கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்வில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வருவர். பல தருணங்களில் முக்கிய பிரமுகர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், திரை நட்சத்திரங்களும் கூட மக்களோடு மக்களாய் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டு கோவை ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அதற்கு முன்பு 2023ல் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 2024ல் அப்போதைய குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு வரும் ஞாயிறு (15.2.26) அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பூட்டான் மன்னரும் கோவை ஈஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.