டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியில் 18வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக டாக்டர் என்.ஜி.பி அறக்கட்டளையின் அறங்காவலர் அருண் பழனிசாமி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

NGP sports 2222

மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பல்வேறு தடகள மற்றும் களப்போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 358 மதிப்பெண்களுடன் டெல்டா ஹவுஸ் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது.

நிகழ்வில் கல்லூரி செயலாளர் முத்துசாமி, முதல்வர் பிரபா, உடற்கல்வி இயக்குநர் சஞ்சீவ், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.