கோவை சாலையில் ஃபெராரி, லம்போர்கினி என விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்களையும் பார்க்க முடியும், விலைமதிப்பில்லாத மேபேக், ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் பார்க்க முடியும்.

கோவை மாநகரில், சில நேரங்களில் நம்மை திரும்பி பார்க்கவைக்கும் தோற்றம் கொண்ட கார்கள் ஒட்டுமொத்த வாகனஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துவிடும்.

டெஸ்லா நிறுவனத்தின் பிரபல தயாரிப்பான டெஸ்லா ‘சைபர் ட்ராக்’ இன்று கோவை அவிநாசி சாலை மேம்பாலத்தில் இறங்கி ‘மிதந்து’ சென்ற சம்பவம் கோவை நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

cyber 2

மிகவும் தனித்துவமான வடிவமைப்பை கொண்ட இந்த பிக் அப் ட்ரக் வகை காருக்கு உலகம் முழுக்க மவுசு உண்டு. இது ஒரு எலக்ட்ரிக் கார். இதன் ஆரம்ப விலை ரூ.51 லட்சம்.  இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்பது இதன் சிறப்புகளில் முக்கியமான ஒன்று.