இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை சார்பில், பிம்பம் என்ற தலைப்பில், கல்லூரிகளுக்கு இடையிலான விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநர் குழந்தை வேலப்பன் கலந்துகொண்டார்.

சிறப்பு உரையில் அவர் பேசுகையில், கலாச்சார பன்முகத்தன்மையும், சமூகங்களை ஒன்றிணைக்கும் பொதுவான மனித மதிப்புகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இந்துஸ்தான் கல்லூரியில் மாணவராக இருந்த தனது அனுபவங்களை நினைவுகூர்ந்த அவர், அடிப்படை நிலை கற்றல் முதல் குறும்படங்கள் மற்றும் திரைப்பட விழாக்களில் பங்கேற்ற பயணத்தை பகிர்ந்து கொண்டார்.

படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட குறும்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர் ஜோன் ஆண்டனி ராஜா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.