பி.எஸ்.ஜி அறநிலையம் சார்பில் ‘பி.எஸ்.ஜி வானவில்’ என்ற தலைப்பில் சமுதாய மேம்பாட்டிற்காக மாதந்தோறும் ஆன்மீக இலக்கியத் தொடர் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் 94வது மாத நிகழ்வு பீளமேடு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வரும் பிப்ரவரி 7ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5.15 மணியளவில் நடைபெற உள்ளது.
இதில், பி.எஸ்.ஜி சர்வஜன மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ்.ஜி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெறும். பேச்சாளர் ராஜாராம் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற தலைப்பில் பேச உள்ளார். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.
