பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “திறன்மிகு ஆய்வுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள்” என்ற தலைப்பில் ஆசிரியர் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

FACulty 2

வரவேற்புரையில் நூலகர் சிவகுமார், ஆய்வுக்கு தேவைப்படும் மேம்பட்ட இலக்கமுறை கருவிகளை ஒருங்கிணைத்தலின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

தொடக்க உரையில் கல்லூரியின் செயலாளர் கண்ணையன் பேசியதாவது: ஆசிரியர்கள் ஆராய்ச்சி பங்களிப்புகளை வலுப்படுத்தவும் செம்மையான ஆய்வினை உருவாக்குவதற்கும் உள்ளடக்கத்தை உற்று நோக்கல் அவசியம். நவீன கல்விசார் சூழலில் திறன் மிகுந்த செயல்படுதலே கடின உழைப்பை விட சிறந்தது. கல்வி புலத்தில் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தும் போது நேர்மையுடனும், நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டும்.

தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது. இதில் சுமார் 100 ஆசிரியர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.