2009-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், பெயர் பதிவு செய்யும் கால அவகாசம் செப்டம்பர் 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2000-ன்படி, 2009-ம் வருடம் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 26.09.2026 முடிய நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தையின் பெயர் பதிவு செய்து, குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற, கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்று குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவண நகலுடன் (School Mark Sheet or School TC or School Bonofide Letter or Etc.) உரிய பெயர் பதிவு காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தியும், விண்ணப்பத்தில் விண்ணப்பித்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
