கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின், ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறை சார்பில் ஆரா’26 என்ற ஆடை அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் ஹேம்கா பொட்டிக்கின் உரிமையாளர் சஹானா கிரிஷ், போஷ்ரோபில் வடிவமைப்பாளர் அனுரேகா கெளதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, ஆடை அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களைத் தேர்வு செய்தனர்.

நிகழ்வில் ரூ.20,500 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. முதற்பரிசினை மாணவி கீர்த்தனா, இரண்டாம் பரிசினை மாணவி திரிநயா, மூன்றாம் பரிசினை மாணவி ரிதனி பெற்றனர். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் கீதா, ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையின் தலைவர் ரம்யா, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

