கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்க லீக் 2026 போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சதீஷ் நாயர், துணைத் தலைவர் செக்கலிங்கம், இணை செயலாளர் டாண்டூ, துணைத் தலைவர் சதாசிவம் மற்றும் பொருளாளர் நரேந்திரன் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் செயலாளர் சதீஷ் நாயர் மற்றும் துணைத் தலைவர் செக்கலிங்கம் கூறும் போது: டென்னிஸ் போட்டிகள் வார இறுதி நாட்களில் காலை 7 மணி முதல் 11 வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் நீலகிரி என ஒவ்வொரு மாவட்டங்களிலிலும் வார இறுதியில் நடைபெறவுள்ளது.
2026 ஆம் ஆண்டு லீக்கில் எ முதல் கே வரை 11 பிரிவுகளில் 116 அணிகள் மற்றும் சுமார் 1,200 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 1977 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் டேவிஸ் கப் போட்டிகளை கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் வெற்றிகரமாக நடத்தியது. இதனைத் தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் தனது முதல் டென்னிஸ் லீக் போட்டியை தொடங்கியது எனக் கூறினர்.
போட்டி அட்டவணை மற்றும் முடிவுகள் www.cdta.co.in என்ற இணையதளத்தில் காணலாம்.

