ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் நைட்டிங்கேல் அம்மையாரை நினைவு கூறும் வகையில் விளக்கேற்றுதல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கவிதா வரவேற்புரை வழங்கினார். ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நர்சிங் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக தெற்கு மண்டல முன்னாள் துணைத் தலைவர் டாக்டர் ஜெயினி கெம்ப் பங்கேற்றார். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் நைட்டிங்கேல் உறுதிமொழி ஏற்றனர்.
