திருமதி மாரியம்மாள் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் திறன் கண்காட்சி நடைபெற்றது.
இதில் களிமண் பொம்மைகள், குடும்ப மரம், கடிகார மாதிரிகள், ஓலைச் சுவடி மாதிரிகள், கங்கை கொண்ட சோழபுரம் சிற்ப மாதிரி, ஐவகை நிலங்கள் மாதிரிகள், இலக்கண விளக்க அட்டவணைகள், ஒரிகாமி கலைப்பணிகள், வடிவியல் வடிவங்கள், கணிதப் பூங்கா, பகல்–இரவு செயல்பாட்டு மாதிரி, சூரிய மண்டல செயல்பாட்டு மாதிரி, மனித உடல் உறுப்புகள் செயல்பாட்டு மாதிரிகள், எரிமலை, காற்றாலை போன்ற பல்வேறு கல்வி மற்றும் அறிவியல் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுப்பிரமணியன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன், பள்ளித் தலைமையாசிரியை பூங்கொடி, பழனிகவுண்டர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
