கோவை மாநகராட்சி சார்பில், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் பழைய படுக்கைகள், சோபாக்கள், மெத்தைகள், மேஜை, நாற்காலிகள் மற்றும் பிற பெரிய வீட்டு கழிவுப்பொருட்கள் ஆகியவற்றை முறையாக அகற்ற வரும் ஜனவரி 10,11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்த 4 தினங்களிலும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மேற்கண்ட பெரிய அளவிலான கழிவுப்பொருட்களை வார்டு வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சேகரிப்பு இடங்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்கலாம். இவ்வகை கழிவுகளை தெருவோரம், சாலைகளில் அல்லது காலி இடங்களில் விட்டுவிடாமல் சிறப்பு முகாமைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள் சேகரிப்பு மையங்களாக செயல்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் வார்டு சுகாதார மேற்பார்வையாளரை தொடர்பு கொள்ளலாம். கழிவுகளை முறையாக நிர்வகித்து, சுத்தமான கோயம்புத்தூரை உருவாக்கும் இம்முயற்சிக்கு பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விபரங்களுக்கு கீழ்க்கண்ட மண்டல உதவி எண்களில் தொடர்பு கொள்ளவும்:

1.வடக்கு மண்டலம்: 89259 75980

2.மேற்கு மண்டலம்: 89259 75981

3.மத்திய மண்டலம்: 89259 75982

4.தெற்கு மண்டலம்: 90430 66114

5.கிழக்கு மண்டலம்: 89258 40945