கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் மற்றும் வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வட கோவையில் உள்ள தமிழ்நாடு வனக் கல்லூரியில் தமிழ்நாடு வனப்படை நவீன மையமாகக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சிறுமுகை பெத்தி குட்டையில் ரூ.19.5 கோடியில் கட்டப்பட்டுள்ள வனவிலங்குகள் இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையம், சாடிவயல் யானைகள் முகாம், தமிழ்நாடு வனத்துறை ஆவண காப்பகம், சேமிப்பகம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஆர்.எஸ் புரம் மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ரூ.9.5 கோடியில் கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார்.

மேலும் ரூ.31.3/4 கோடியில் 12 புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள், குப்பைகள் சேகரிப்பு மையம் உட்பட ரூ.162.5 கோடியில் 107 முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். விழாவில் 10 ஆயிரத்து 626 பயனாளிகளுக்கு ரூ.136.5 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

