கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜரின் பிறந்த நாளான தேசியக் கணித தினத்தைக் கொண்டாடும் வகையில் டிஜிட்டல் புகழஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கீதா வாழ்த்துரை வழங்கினார்.
ராமானுஜரின் சிறப்பினைக்கூறும் வாசகங்களும், கணித மேற்கோள்களும் அடங்கிய டிஜிட்டல் போஸ்டர்கள் உருவாக்கப்பட்டு, பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதை தங்களின் சமூக ஊடகத்தளங்களில் பதிவிட்டனர். நிகழ்வில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் போஸ்டர்களை 1500க்கும் மேற்பட்டோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
