நிர்மலா மகளிர் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில், மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவித்து, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
பொதுமக்களிடம் நேரடியாக உரையாடி, பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பையை தினசரி வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
