கோவை மாநகரில் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இரண்டு வயது வரையிலான குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், ‘அமுதம்’ எனும் இலவசப் பசும்பால் திட்டம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலில் இயங்கும் ‘மக்கள் சேவை மையம், இந்த சமூகப் பங்களிப்புத் திட்டத்தை முன் நிறுத்திச் செயல்படுத்தி வருகிறது.
பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘அமுதம்’ பால் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தாய்மார்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் தங்களது பெயர்களைப் பதிவு செய்து, குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை காண்பித்து தினமும் தலா கால் லிட்டர் தரமான பசும்பாலை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
