சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. மாணவியரின் நடனம், நாடகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராக திருப்பூர் புனித ஜோசப் மகளிர் கல்லூரியின் செயலர் அருள்சீலி கலந்துகொண்டு பேசுகையில்: கிறிஸ்துமஸ் என்றாலே மகிழ்ச்சி, நம்பிக்கை, மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியடைதல் ஆகிய மூன்று விஷயங்கள் முக்கியமானவை. நாமும் மகிழ்வாக இருக்க வேண்டும், மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். இன்று பலருக்கு உள்மன அமைதியும், வெளியிலும் அமைதி இல்லை. நல்லவர்கள் வாழ்ந்ததால்தான் இந்த உலகம் இன்று நிலைபெற்றிருக்கிறது என்று பேசினார்.

விழாவிற்குத் தலைமையேற்று பள்ளிச் செயலர் கவிதாசன் பேசியதாவது: எல்லா மதங்களும் உண்மையைப் பற்றித்தான் சொல்கின்றன. நீங்கள் எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம், ஆனா உண்மையாக இருக்க வேண்டும்.
மாணவர்கள், பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். ஒழுக்கமாக இருத்தல், பெற்றோர் பேச்சைக் கேட்டல், உண்மையாக இருத்தல், மற்றவர்களுக்கு உதவியாக இருத்தல் இவை அத்தனையும் இளம்பருவத்தில் முக்கியமானவை. எல்லோரையும் மதித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
நிகழ்வில் பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
