கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமியில் சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கு வரும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடப்பிரிவிலும் அந்தந்த, துறை சார்ந்த சிறந்த வல்லுனர்களைக் கொண்டு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நடைபெற்ற பொருளாதாரம் குறித்த சிறப்பு அமர்வில் பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் துணை தலைவரான நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அமர்வில் பொருளாதார கோட்பாடுகள், திட்டமிடல் ஆணையம், ஐந்தாண்டுத் திட்டங்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகிய தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவும், பின்னர் அது சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்வும் நடைபெற்றது. அமர்வில் கேபிஆர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்று வரும் சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
