டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்த்துறைத் தலைவர் குப்புச்சாமி கலந்து கொண்டு, “பெருங்கவினின் பேராற்றல்” என்ற தலைப்பில், மகாகவி பாரதியாரின் கவிதைகளின் தனித்துவம், நாட்டுப்பற்று, பெண் விடுதலை, சமூக சமத்துவம் ஆகிய கருத்துகளை விளக்கினார்.
மேலும், பாரதியின் சிறப்பினை போற்றும் வகையில், பாரதியின் உருவத்தை பல்லக்கில் வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்ற நிகழ்வையும் மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.
