கோவை ராம்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முதல் நாளான இன்று காலை கலச ஸ்தாபனம் மற்றும் ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஹோமம் நடைபெற்றது.

18ம் தேதி காலை 9.15 மணிக்கு ஸ்ரீமத் சுந்தரகாண்ட ஹோமம், மாலை 6.30 மணிக்கு சீதா கல்யாணம் நடைபெறும்.

19ம் தேதி காலை 5 மணி முதல் பவமான சூக்த ஹோமம், பலிதா சூக்த ஹோமம், வாயு சூக்த ஹோமம், ஸ்ரீ ராம, சீதா, ஹனுமான் மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெறவுள்ளன. மாலையில் திருவீதி உலாவுடன் அனுமன் ஜெயந்தி விழா நிறைவடையும்.