போதைப்பொருள் இல்லாத எதிர்காலத்திற்காக கேபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 9வது கேபிஆர் மினி மாரத்தான் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில், பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த 12,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டியில் 3 கி.மீ, 5 கி.மீ மற்றும் 10 கி.மீ என மூன்று பிரிவுகள் இடம்பெற்றன. இவை முறையே கேபிஆர் கல்வி நிறுவனங்களின் நுழைவாயில், கனியூர் சுங்கச்சாவடி மற்றும் கருமத்தம்பட்டி ஆகிய இடங்களில் இருந்து தொடங்கப்பட்டன.

IMG 20251214 WA0031

கேபிஆர் குழுமத்தின் தலைவர் கே. பி. ராமசாமி மற்றும் கேபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், இந்திய கபடி வீரர் பிரபஞ்சன், இந்திய மும்முறை தாண்டுதல் வீரர் பிரவீன் சித்திரவேல், கோயம்புத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் மாரத்தானை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

அனைத்துப் பிரிவுகளும் கேபிஆர் விளையாட்டு வளாகத்தில் முடிவடைந்தது. குழந்தைகள், பள்ளி மாணவர்கள், ஆண்கள், பெண்கள், 45 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் மற்றும் கேபிஆர் மில் பணியாளர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, பங்குபெற்ற அனைவருக்கும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் நோக்கமாக இருந்தது.

IMG 20251214 WA0030

பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றிய கேபி ராமசாமி அவர்கள் ஆரோக்கியமான, போதை இல்லாத வாழ்க்கையே ஒரு மனிதனை வாழ்வில் உயர்வான இடத்திற்கு வெற்றியை தேடி அழைத்து செல்லும் என கூறினார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கே.கார்த்திகேயன் ஐ.பி.எஸ், போதை பழக்கம் எவ்வாறு தொடங்குகிறது, அதை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் போதை பொருளுக்கு எதிராக தமிழ் நாடு காவல்துறையின் முன்னெடுப்புகள் பற்றி விவரித்தார்.