ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில், “சினாரியோ-2025” என்ற மாணவர் கலைத் திருவிழா நடைபெற்றது.
தனிநபர் பாடல், குழுப் பாடல், தனிநபர் நடனம், குழு நடனம், இசைக் கருவிகள் மீட்டுதல், மௌன நாடகம், தனிநபர் நடிப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாாி ராம்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுக்கோப்பை, ரொக்கப்பரிசு வழங்கிப் பாராட்டினார்.
விழாவில் பி.சி.ஏ துறைத்தலைவர் ஹரிபிரசாத், தமிழ்த் துறைத்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
