பொள்ளாச்சி என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்கள், மிராக்கிள் இன்டக்கிரேடெட் ஹல்த் சென்டர், கோவை தடகள சங்கம் சார்பில், கணைய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ‘மிராக்கிள் மாரத்தான் 2025’ போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நலிவுற்ற புற்றுநோயாளிகளுக்கான நிதி சேகரிப்பு முயற்சியாக மாரத்தான் நடத்தப்பட்டது. 8 வயதுக்கு மேற்பட்ட இரு பாலருக்கு, 10 கி.மீ, 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் 5 கி.மீ, 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, 2 கி.மீ உள்ளிட்ட பிரிவுகளில் நடத்தப்பட்டது. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்களுக்கு வெட்ரான் பிரிவும் அமைக்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் தொடங்கிய போட்டியில் சுமார் 3900 பேர் பங்கேற்றனர்.

marathon 3

ஆண்களுக்கான 10 கி.மீ. ஓட்டப் பிரிவில் ஊட்டியைச் சேர்ந்த நிகின் குமார், 5 கி.மீ பிரிவில் செயிண்ட் தாமஸைச் சேர்ந்த பிரணாய்ஸ், 2 கி.மீ. குழந்தைகள் பிரிவில் மகரிஷி சர்வதேச பள்ளியைச் சேர்ந்த அபிஜித் முதல் பரிசை வென்றனர்.

10 கி.மீ. பெண்கள் ஓட்டப் பிரிவில் வி.எல்.பி. கல்லூரியைச் சேர்ந்த திவ்யா, 5 கி.மீ பிரிவில் எஸ்.டி.சி.யைச் சேர்ந்த சிவசங்கரி,  2 கி.மீ. குழந்தைகள் பிரிவில் விவேக் வித்யாலயாவைச் சேர்ந்த திஷா முதல் பரிசை வென்றனர். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

 

marathon 2

நிகழ்வில் சக்தி குழுமம் தலைவர் மாணிக்கம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் செயலர் சுப்பிரமணியன், கோவை சி.டி.ஏ.ஏ. ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், முன்னாள் மாணவர் சங்கம் மதிப்பியல் தலைவர் பாலசுப்பிரமணியன், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கோவிந்தசாமி, என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்கள் மக்கள் தொடர்பு மேலாளர் நாகராஜன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.