ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல் கலந்துகொண்டு பேசியதாவது: நாட்டின் எதிர்காலமான இளைய தலைமுறையைச் சிந்திக்கத் தூண்டுவதோடு சமூகத்தில் நிலவும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், உதவக்கூடிய உயர்கல்வி மற்றும் ஆய்வுகளில் மாணவிகள் ஆர்வத்துடன் தொடர்ந்து செயல்பட வேண்டும். கல்வி என்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் பயன் தருவது என்பதை மனதில் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.

snr 4 scaled

கல்லூரி முதல்வர் சித்ரா பட்டம் பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசினார். இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 503 பேர் பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.