ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோராக உள்ள கல்லூரியின் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சுயதொழில் வாய்ப்புகள், சவால்கள், அவற்றைக் கையாளும் வழிகள் பற்றிக் மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையிலான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

கல்லூரி முதல்வர் சித்ரா இதுபற்றிக் கூறும்போது: எங்கள் கல்லூரியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் ஆகிய முப்பரிமாணங்களுள் மாணவிகளின் விருப்பம் மற்றும் திறமைகளைப் பொறுத்து வழிகாட்டி வருகிறோம்.

அந்த வகையில் முன்னாள் மாணவிகள் தங்களுக்குள் இணைந்து செயல்படவும், வழிகாட்டவும் ஏற்ற வகையில் தொழில்முனைவோர் தினத்தைத் திட்டமிட்டிருந்தோம் என்றார்.