டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. மாணவர்களிடையே படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடந்தது. பல மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் புதுமையான திட்டங்களை காட்சிப்படுத்தினர்.

WhatsApp Image 2025 11 11 at 5.12.21 PM

கல்லூரி முதல்வர் சரவணன், கணினி அறிவியல் புல முதன்மையர் மேரி மாக்டலீன் ஜேன்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறையின் தலைவர் சரண்யா, பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.